வாட்ஸ் அப்பால் அடித்த அதிர்ஷ்டம்! லட்சக்கணக்கில் சம்பாதித்த தம்பதி.. எப்படி தெரியுமா?

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் வாட்ஸ் அப் குழு உதவியால் தம்பதி தங்கள் உடல் எடையை குறைத்துள்ளதுடன் லட்சக்கணக்கில் பணத்தையும் சம்பாதித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஆதித்யா - காயத்ரி.

திருமணத்துக்கு பின்னர் இந்த தம்பதியின் உடல் எடை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து கூகுளில் எடை குறைப்பு வீடியோக்கள் பலவற்றையும் பார்த்து எடை குறைக்க முயற்சியில் ஈடுப்பட்டனர்.

இந்த நேரத்தில் தான் இவர்களது வாட்ஸ் அப் குழுவில் எடை குறைப்பதற்கான போட்டி குறித்த மெசேஜ் வந்துள்ளது.

பின்னர் அந்த மெசேஜை அனுப்பிய நிறுவனம் ஆதித்யா, காயத்ரியை வாட்ஸ் அப் குழுவில் இணைத்துள்ளது.

சில மாதங்களில் நடைபெறும் எடை குறைப்பு போட்டியில் தங்களது எடையை அதிகப்படியாக குறைக்கும் நபர்களுக்கு 20 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படம் என வாட்ஸ் அப் குழுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் கலந்துக் கொள்ள ஆதித்யாவும் காயத்ரியும் முடிவு எடுத்துள்ளனர்.

பரிசுத் தொகையும் வெல்ல வேண்டும், உடல் எடையையும் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் இருவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் கடின உழைப்பின் காரணமாக ஆதித்யாவும் காயத்ரியும் 23 கிலோ வரை எடையை குறைத்து பரிசை சொந்தமாக்கியுள்ளனர்.

இதையடுத்து முன்னர் இருந்த புகைப்படத்தையும் தற்போது கட்டுடல் உடன் இருக்கும் புகைப்படத்தையும் தம்பதி சமூகவலைதளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

போட்டியில் வென்ற பணத்தில் இந்த தம்பதியினர் சொந்தமாக உடற்பயிற்சி கூடத்தை தொடங்கி மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...