அவன் குழந்தை உன் வயிற்றில் இருக்க கூடாது... மனைவியை மீட்டு கொடுங்க என கணவன் கண்ணீர்

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை வளரக்கூடாது என்று கூறி, கர்ப்பத்தை கலைத்துவிட்டார்கள் என்று கூறி கணவர் கண்ணீருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ள சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகாவை சேர்ந்தவர் சம்பந்தம். இவருக்கு சாருலதா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் சாருலதா, விஜய் என்பவரை காதலித்து வந்துள்ளார். விஜய் தலித் சமூகத்தை சேர்ந்தவர். சாருலதா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் இந்த திருமணம் சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவரையும் திட்டமிட்டு அவர் பிரித்துள்ளார்.

இதையடுத்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. அப்போது விஜய் கையில் மனுவுடன் வந்தார்.

அதில், என் மனைவி சாருலதாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள்.

இது சம்பந்தமாக காட்டுமன்னார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். ஒரு தலித் பையனின் குழந்தை உன் வயிற்றில் வளர கூடாது என்று கூறி, வயிற்றில் உள்ள குழந்தையை வலுக்கட்டாயமாக கலைத்துள்ளனர்.

என் மனைவி, இப்போது எப்படி இருக்கிறார், என்ன நிலைமையில் இருக்கிறார் என்றுகூட தெரியவில்லை

கடந்த மூன்று மாதமாக மனைவியை பிரிந்து, மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். மனைவியின் வீட்டினரால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. என் மனைவியை என்கிட்ட ஒப்படைத்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...