மனைவி ஏமாற்றியதாக சந்தேகம்... குடும்பத்தில் 9 பேரை கொன்ற நபர்: வீட்டுக்கு தீ வைப்பு

Report Print Arbin Arbin in தெற்காசியா

மனைவி தம்மை ஏமாற்றியதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் இளைஞர் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 9 பேரை கொன்று தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டவரான அஜ்மல் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காக நாடு திரும்பிய அவரே இந்த அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

சவுதியில் பணியாற்றி வந்தபோதே தமது மனைவி தம்மை ஏமாற்றுவதாக அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே நாடு திரும்பிய அவர், தமது மனைவி, பிள்ளைகள், மாமியார் உள்ளிட்ட ஐவரை கொலை செய்த பின்னர், மனைவியின் குடியிருப்புக்கு தீயிட்டுள்ளனர்.

அஜ்மலுடன் அவரது தந்தையும் இந்த கொடூர கொலைக்கு துணை நின்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தை மற்றும் சகோதரனுடன் சம்வத்தின்போது மனைவியின் வீட்டுக்கு சென்ற அஜ்மல், தமது மனைவி தம்மை ஏமாற்றியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து தம்மிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 8 பேர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பொலிசார் அஜ்மல் மற்றும் அவரது தந்தையை கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...