என்னை விட்டுடுங்க என கதறி அழுத இளைஞர்.. பள்ளி மாணவியுடன் அவருக்கு நடந்த திருமணம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் இளைஞர் ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அவர் விருப்பத்துக்கு மாறாக பள்ளி மாணவியுடன் அவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த நித்தியானந் என்ற இளைஞர் தனது இரு நண்பர்களுடன் பீகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சியை காண வந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மூவரையும் கடத்தி கொண்டு சென்றது.

பின்னர் அந்த கும்பல் நித்தியானந்தை சரமாரியாக அடித்து உதைத்து திருமணம் மண்டபத்துக்கு தூக்கி சென்றது.

அங்கிருந்த ஒரு தம்பதி, நித்தியானந்திடம், நீ எங்களுடைய மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தினார்கள்.

ஆனால் அவர் சம்மாதிக்காத நிலையில் மீண்டும் அடித்து உதைத்தனர்.

இதை தொடர்ந்து நித்தியானந்துக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டு சிறுமியுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அவர் தன்னை விட்டுவிடும் படி கதறியும் அங்கிருந்தவர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

அதுவரை நித்தியானந்தின் இரு நண்பர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் இருவரும் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நித்தியானந்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பொலிசார் கூறுகையில், பீகாரின் சில பகுதியில் பக்குடா விவாதா என்ற திருமண முறை இன்னும் நடைமுறையில் உள்ளது.

அதாவது திருமணமாகாத நபரை கடத்தி கொண்டு வந்து தங்கள் வீட்டு பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பது தான் இம்முறையாகும்.

கடந்தாண்டு மட்டும் திருமணத்துக்காக 4301 பேர் கடத்தப்பட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது.

இது சட்டவிரோதமானது என தெரிந்தும் மக்கள் இப்படி செய்கிறார்கள் என கூறினார்கள்.

இதனிடையில் தங்கள் மகனுக்கு கட்டாயம் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதால் அவர் மனைவியை தங்களால் ஏற்றுகொள்ள முடியாது என நித்தியானந்தின் பெற்றோர் கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்