பாகிஸ்தான் அரசால் இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட தடை: ஒரே நிறுவனத்திற்கு மட்டும் 491கோடி இழப்பு!

Report Print Abisha in தெற்காசியா

பாகிஸ்தான் அரசு அந்நாடு வழியாக இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ள நிலையில், இதனால், பல விமான நிறுவனங்கள் நிதி இழப்பில் சிக்கி கொண்டுள்ளன.

இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மோதலால் பொருமளவில் நிறுவனங்கள் நிதி இழப்பை சந்திக்கின்றன.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா பாகிஸ்தானின் பால்கோட்டில் கடந்த பிப்ரவரி 26ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியில் தடை விதிக்கப்பட்டது.

முன்னதாக பாகிஸ்தான் வான்வெளியில் இந்தியாவிற்கு 11பாதைகள் இருந்தன. தொடர்ந்து இரண்டு பாதைகள் மட்டும் அனுமதிப்பதாக பாகிஸ்தான் அறித்தது. இவை இரண்டும் தெற்குப் பகுதியில் இருப்பவை என்பதால், இன்னமும் விமானத்தை இயக்குவதில் இந்திய விமானங்கள் சிரமத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல தற்காலிகமாக வேறு பாதையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. சிக்கலைச் சமாளிக்க முடியாமல், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, சில சர்வதேச விமானங்களை ரத்துசெய்திருக்கிறது.

இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "பாகிஸ்தான் வான் பகுதிகளில் தடை நீடித்துவருவதால், பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துவருகின்றன. அதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ஜூலை 2-ம் திகதி வரை 491 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஏற்கெனவே 58,351 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்நிலையில், இந்த இழப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோ ஏர் ஆகிய நிறுவனங்கள், முறையே 30.73 கோடி ரூபாய், 25.1 கோடி ரூபாய், 2.1 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கின்றன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்