இந்தியாவை அழிக்க.. ஆப்கானுடன் கைகோர்த்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம்: உயர் எச்சரிக்கை

Report Print Basu in தெற்காசியா

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தைபா குழுவினர் ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துள்ளதால், அங்குள்ள இந்திய தூதரகங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14ம் திகதி புல்வாமாவில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிஆர்பிஎஃப் கான்வாய் மீது ஜெய்ஷ்-இ-முகமது தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் ஜெட் விமானங்கள் பாகிஸ்தானின் மன்ஷெராவில் உள்ள பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாமைத் தாக்கியது.

இத்தாக்குதலை அடுத்து ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தைபா குழுக்களை சேர்ந்த தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து தலிபான்கள், ஆப்கானிய கிளர்ச்சிக் குழு, ஹக்கானி குழுவுடன் கைகோர்த்து உள்ளனர்.

ஆப்கானில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தைபா தீவிரவாதிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்து தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாத குழுக்களை ஒடுக்க பாகிஸ்தான் தனது ஜூலை நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்நிலையில், ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் உட்பட இந்திய தூதரக நிறுவனங்களுக்கு, ஹாஜி அப்துல் சஃபி தலைமையிலான லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது வாகனம் மூலம் வெடிகுண்டு தாக்குதலை நடத்த மற்றொரு பயங்கரவாதி குழுவான காரி வாரி குல் குல் அச்சுறுத்தி உள்ளது. காந்தஹாரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தலிபான் தாக்குதலுக்கு எதிராக ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்கானில் உள்ள இந்திய தூதரக நிறுவனங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்