அமெரிக்காவில் சொகுசு ஹொட்டலை தவிர்த்து தூதரகத்தில் தங்கும் இம்ரான் கான்! காரணம் என்ன?

Report Print Kabilan in தெற்காசியா

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சொகுசு ஹொட்டலில் தங்காமல் தங்கள் நாட்டு தூதரகத்திலேயே தங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றவுடன், நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஏராளமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினார். இந்நிலையில், வரும் 21ஆம் திகதி அமெரிக்காவுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பயணத்தின் மூலம் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, உலக வங்கியிடம் இம்ரான் கான் கடன் கேட்க உள்ளார். சுமார் 600 கோடி டொலர்கள் கடன் அளிக்க முன் வந்துள்ள உலக வங்கி, பாகிஸ்தான் அரசு பணத்தை பொருளாதார வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் செலவிட வேண்டும்.

அத்துடன், அதிகாரிகள் தங்களின் தேவையற்ற செலவை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் காரணமாக, இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள சொகுசு ஹொட்டலில் தங்காமல், தங்கள் நாட்டு தூதரகத்தின் விருந்தினர் இல்லத்தில் மட்டுமே தங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் தூதரகம் வாஷிங்டன் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்த தூதரகத்தில் இம்ரான் கான் தங்குவதால், பாதுகாப்பு சிக்கல் ஏதும் ஏற்படாதவாறு அமெரிக்க பொலிசார் அதை உறுதி செய்வது அவசியமாகும்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்