கர்ப்பமாக உள்ள மகளை வயிற்றில் குத்தி கொன்ற தந்தை.. அதிரவைக்கும் சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கர்ப்பிணி மகளை ஆணவக்கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்கோபரை சேர்ந்தவர் ராஜ்குமார் (55). இவர் மகள் மீனாட்சி (20). இவர் பிரிஜேஷ் (26) என்ற இளைஞரை காதலித்து வந்தார்.

இந்த காதல் விவகாரம் ராஜ்குமாருக்கு தெரிய வந்த நிலையில் சாதி வேறுபாடு காரணமாக கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு ஓடிய மீனாட்சி, பிரிஜேஷை திருமணம் செய்து கொண்டு வேறு ஊரில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் மீனாட்சி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் பெற்றோரை பார்க்க அவருக்கு ஆசை ஏற்பட்டது, தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் தந்தை தன்னை மன்னித்து ஏற்று கொள்வார் என நினைத்தார்.

அதன்படி ஊருக்கு அவர் வரும் தகவலை முன்னரே பெற்றோரிடம் கூறினார்.

ஆனால் மீனாட்சி ஊருக்கு வந்தால் தனக்கு அவமானமாகி விடும் என நினைத்த ராஜ்குமார், மகளை வேறு இடத்துக்கு வரவழைத்து கர்ப்பிணி என்றும் பாராமல் அவர் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர் பொலிசார் மீனாட்சி சடலத்தை கைப்பற்றிய நிலையில் இது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் ராஜ்குமாரிடம் விசாரித்தனர்.

ஆனால் முதலில் மீனாட்சியை பார்க்கவேயில்லை என கூறிய ராஜ்குமார் பின்னர் கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

இதையடுத்து பொலிசார் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்