வெளிநாட்டில் தமிழக இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... எதுவும் உதவாமல் திருப்பி அனுப்பிய கொடுமை

Report Print Santhan in தெற்காசியா

துபாயில் சிலிண்டட் வெடித்து உயிர் தப்பிய தமிழக இளைஞர் நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் பொது நிவாரணம் கோரி மனு அளித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் ஏஜெண்ட் ஒருவர் மூலம் துபாய்க்கு சென்று அங்கு துப்புரவு வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது வீட்டில் தங்கியிருந்த போது, திடீரென்று சிலிண்டர் வெடித்ததால், அவருக்கு பயங்கரமான தீக்காயம் ஏற்பட்டது. அவர் வேலை பார்த்தோ கம்பெனி கூட, அவருக்கு சிகிச்சை அளிக்காமலும், காப்பீடு வழங்காமலும் தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது

இதனால் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்த சக்கரவர்த்தி, தனது வறுமையை கருத்தில் கொண்டு தனக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வாழ்வாதாரத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்