ஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ... Smart டிவியால் வந்த வினை: அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் ஸ்மார்ட் டிவி ஒன்று கணவன் மற்றும் மனைவி இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து ஆபாச தளத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இப்போது இருக்கும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. எந்தளவிற்கு இதில் நன்மை இருக்கிறதோ, அதே அளவிற்கு நாம் இதை சரியாக கையாளாவிட்டால் அந்தளவிற்கு ஆபத்துகளும் இருக்கிறது.

இந்நிலையில் தான் ஸ்மார்ட் டிவி ஒன்று ஹெக்கர்களால் ஹெக் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் தன்னுடைய வீட்டின் படுக்கையறையில், ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்கி வைத்துள்ளார்.

இது ஸ்மார்ட் டிவி என்பதால், இதில் எப்போதும் நெட் வசதி இருந்து கொண்டே உள்ளது. ஸ்மார்ட் டிவி என்பது நாம் கையில் வைத்திருக்கும் போன் போன்றது தான், நாம் எந்தளவிற்கு போனில் தேடி வீடியோ, புகைப்படங்கள் பார்க்கிறமோ, அதே போன்று தான் அதிலும் நாம் பார்க்கலாம்.

அப்படி ராஜேஷ் தன்னுடைய ஸ்மார்ட் டிவியில் எப்போதும் ஆபாச படம் பார்ப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில், அவர் வழக்கம் போல் மனைவி இல்லாத நேரத்தில், குறித்த ஆபாசதளத்திற்கு சென்று பார்த்த போது, அதில் இவர் தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ பதிவாகியுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக குறித்த ஆபாசதளத்திற்கு இது குறித்து புகார் அளிக்க, உடனடியாக அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. அதன் பின் இந்த வீடியோ எப்படி வந்தது என்று ஆராய்ந்த போது, இவர் எப்போதும் ஆபாசபடம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதால், இவரை ஹேக்கர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

அதன் படியே கணவன் மற்றும் மனைவி இருவரும் நெருக்கமாக இருந்த போது, ஸ்மார்ட்டிவியில் இருந்த கமெராவை வைத்து அதை வீடியோவாக எடுத்து தளத்தில் பதிவேற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆபாச வளைத்தளம் தான் ஹேக்கர்களின் கூடாராமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers