மகளை அப்படி செல்லமாக வளர்த்த தந்தை... இறுதியில் அவருக்கு செய்த துரோகம்: உறைய வைக்கும் சம்பவம்

Report Print Santhan in தெற்காசியா
1240Shares

கேரளாவில் பாசமாக வளர்த்த மகளே தந்தையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்தவர் சஜீவ். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு மகளும், மனைவியும் உள்ளனர்.

சஜீவ் தங்களுக்கு ஒரே மகள் என்பதால், மகள் கேட்டதை எல்லாம் வெளிநாட்டில் இருந்த படி வாங்கி கொடுத்துள்ளார். அவரை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகள் கலூரிக்காக வீட்டிலிருந்து தனியார் பேருந்தில் சென்ற போது, அந்த பேருந்தின் ஓட்டுனருக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாற, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம், தாய்க்கு தெரியவர, அவர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தாயின் பேச்சையும் கேட்காமல், தொடர்ந்து அவர் காதலனை சந்தித்த படி இருந்ததால், மனைவி இது குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் கூறியுள்ளார்.

அதன் பின் வெளிநாட்டிலிருந்து வந்த அவர் மகளிடம் பேசிய போது, அவர் அதை கண்டு கொள்ளமால், வீட்டில் இருந்த நகை மற்றும் பணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, காதலனுடன் தலைமறைவாகியுள்ளார்.

இதனால் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார், சஜீவ்வின் மகள் மற்றும் அவர் காதலிக்கும் பையனையும் கண்டுபிடித்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் மேஜர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் மிகுந்த மன உழைச்சலில் இருந்த சஜீவ், அடிக்கடி மகளின் காதலனை சந்தித்து பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இதன் காரணமாக சஜீவ்வின் மகள், அவரது காதலன் மற்றும் நண்பர் ஒருவர் ஆகிய 3 பேரும் சஜீவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர் தனியாக இருப்பதை அறிந்த அவர்கள், உடனடியாக தடியால் தாக்கியதால், அவர் இரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

சஜீவ்வின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு வருவதற்குள், அவர்கள் தப்பிவிட, உடனே அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சஜீவ்வை அனுமதித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்