காஷ்மீர் பிரச்சனையால் பங்குசந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி

Report Print Raju Raju in தெற்காசியா

அமெரிக்கா சீனாவின் வர்த்தக பிரச்சனைகள், காஷ்மீர் பிரச்சனைகள் அன்னிய முதலீட்டாளர்களிடையே ஒரு அழுத்தத்தை கொடுத்து வரும் நிலையில் இந்திய பங்கு சந்தைகளும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதன்படி திங்களன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 134.75 புள்ளிகள் குறைந்து 10,862.60ஆக உள்ளது.

மும்பை பங்கு சந்தையானது 418.38 புள்ளிகள் சரிந்து 36,699.84 ஆக உள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போரின் காரணமாகப் பங்கு வர்த்தகச் சந்தையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதோடு இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாறுதலும் முக்கிய காரணம் என தெரிகிறது.

மேலும் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பதற்றம் நிறைந்த சூழலில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மொபைல் இன்டர்நெட் சேவை தற்காலிக ரத்து, பல்வேறு தலைவர்களை வீட்டு காவலில் வைப்பது மற்றும் கைது ஆகிய அடுத்தடுத்த நடவடிக்கைகள் பங்கு சந்தைகளில் முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்