இந்திய தூதரை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான்..! காரணம் என்ன?

Report Print Kabilan in தெற்காசியா

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு, இந்திய பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேறின. அதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் தேசிய பாதுகாப்பு அமைப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய தூதரை திருப்பி அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இம்மாத இறுதியில் பொறுப்பேற்க உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரையும், இந்தியாவுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கவும் அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இந்தியாவுக்கான தூதரை டெல்லிக்கு அனுப்புவதில்லை என்றும், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு அமைப்பு கூட்டத்தின் முடிவு அடிப்படையில், பாகிஸ்தான் அரசு அடுத்தடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வருகிற 14ஆம் திகதி நடைபெற உள்ள பாகிஸ்தான் சுதந்திர தினத்தை, காஷ்மீருக்கு ஆதரவு தெரிவிக்கும் தினமாக அனுசரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

AFP

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்