தலையணைக்கு கீழே இருந்த ஆணுறைகள்! சடலமாக கிடந்த கணவன்... அதிரவைத்த மனைவியின் வாக்குமூலம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கணவருக்கு தூக்க மாத்திரை கலந்த தேனீரை கொடுத்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு தப்பிப்பதற்காக மனைவி நடத்திய நாடகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் தானேவை சேர்ந்தவர் பிரமோத் பதான்கர் (43). இவரது மனைவி தீப்தி (36). இந்நிலையில், பிரமோத் கடந்த மாதம் 15-ந் திகதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் பிரமோத் படுத்திருந்த தலையணைக்கு கீழே ஆணுறைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பிரமோத் அதிகளவு தூக்க மாத்திரை உட்கொண்டும், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் அவரது மனைவி தீப்தியிடம் சந்தேகத்தின் பேரில் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் அவர் தனது கணவரை கொலை செய்ததாக ஒப்பு கொண்டார்.

இது குறித்து அவர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதாவது தீப்திக்கு உத்தவ் பஜான்கர் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. பிரமோத்துக்கு தெரியவர கணவர், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் எரிச்சல் அடைந்த தீப்தி கணவரை தீர்த்து கட்ட திட்டம் போட்டார்.

அதன்படி அவர் கடந்த மாதம் தூக்க மாத்திரை கலந்த டீயை கணவருக்கு கொடுத்தார். டீயை குடித்ததும் மயக்கமடைந்த பிரமோத்தை காதலனுடன் சேர்ந்து தீப்தி கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க கணவர் அருந்திய டீ கப்பில் லிப்ஸ்டிக் மூலம் உதடு வடிவத்தை வரைந்தார்.

மேலும் ஆணுறைகளை தலையணைக்கு கீழ் வைத்து தனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது போல் சித்தரித்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் தீப்தியையும், உத்தவ் பஜான்கரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்