அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய பெண் மருத்துவரின் சடலம்... அவர் எழுதிய கடிதம் சிக்கியது

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பெண் மருத்துவரின் சடலம் அவர் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்தவர் சுவாதி ஷிக்வான் (31). இவர் பல் மருத்துவர் ஆவார்.

இந்நிலையில் நேற்று மாலை 7.30 மணியளவில் சுவாதி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரின் அழுகிய உடலை பொலிசார் கைப்பற்றினர்.

பின்னர் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து சுவாதி எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர்.

அதில் என் சாவுக்கு நான் தான் பொறுப்பு என எழுதப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்