வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில்? பெண்ணிற்காக தமிழர் செய்த செயல்... அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

Report Print Santhan in தெற்காசியா

வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி, தமிழகத்தைச் சேர்ந்த நபர் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த சபினா என்ற பெண் ஒருவர் சென்னை விமானநிலையத்திலிருந்து சவுதி அரேபியாவிற்கு செல்ல காத்திருந்துள்ளார்.

அப்போது திடீரென்று விமானநிலைய அதிகாரிக்கு போன் செய்த மர்ம ஆசாமி, சபினா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது, விமானம் புறப்பட்டால் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறியுள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த விமானநிலைய அதிகாரிகள், சுதந்திர தினம் வேறு என்று கூறி, விமானநிலையத்தில் பல்வேறு இடங்களிள் சோதனை செய்தனர்.

அதன் பின் சபினா என்ற பெயரில் யார் இருக்கிறார்? என்று அதிகாரிகள் விசாரித்த போது, அந்த பெயரில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த போன் செய்த நபர் யார் என்பது குறித்து விசாரித்த போது, அந்த மர்ம ஆசாமி சேலம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவன் என்பதை கண்டுபிடித்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே அவன் ஏன் இப்படி செய்தான் என்பது தெரியவரும்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்