இந்தியாவுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கிய பாகிஸ்தான்!

Report Print Kabilan in தெற்காசியா
206Shares

இந்திய திரைப்படங்களை திரையிடக்கூடாது என்பது உட்பட இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முழக்கத்தை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு பிரிவுகளான 370, 35A நீக்கப்பட்டதால் பிரிவினைவாதம், பயங்கரவாதம், ஊழல் போன்றவை முற்றிலும் தடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஆனால், காஷ்மீரை பிரித்ததற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அதன் ஒரு படியாக இந்திய திரைப்படங்களை இனி பாகிஸ்தானில் திரையிடப்போவதில்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையில் எந்த கலாச்சார பரிமாற்றமும் இல்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கு No சொல்லுங்கள் என்ற புதிய பிரச்சாரத்தை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை, புதிய உத்தரவுகளின்படி ஒளிபரப்பாகும் அனைத்து வகையான இந்திய ஊடகங்களையும் நிறுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Reuters

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் இடையில் இயக்கப்பட்டு வரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலை வாகா பகுதியிலேயே பாகிஸ்தான் நிறுத்தியது.

அதனைத் தொடர்ந்து, இனி இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பை இந்தியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்