கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த மனைவி! வெளிநாட்டிலிருந்து அவர் வீட்டுக்கு வந்த ஆண் யார்? அதிரவைத்த பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த திருமணமான பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சுரேஷ். ராணுவவீரர். இவர் மனைவி சீதாராணி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் சண்டையிட்டு கடந்த 4 ஆண்டுகளாக ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

அப்போது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடும் ஹமீது என்ற ஆட்டோ ஓட்டுனருடன் சீதாரணிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையறிந்த கணவர் சுரேஷ் பலமுறை எச்சரித்தும் கேட்கததால், மனைவி சீதாராணியை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டார்.

இந்த சூழலில் ஹமீதுக்கு துபாயில் வேலை கிடைத்த நிலையில் அங்கு வைத்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வந்த ஹமீது கடந்தாண்டு ஊர் திரும்பி மீண்டும் சீதாராணியுடனான காதலை புதுப்பிக்க முயன்றுள்ளார் ஆனால் சீதாராணி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சீதாராணியின் வீட்டிற்கு சென்ற ஹமீது, அவரை ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த ஹமீது, சீதாராணியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.

கத்தி குத்தில் பலத்த காயமடைந்த சீதாராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சித்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே ஹமீது அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வாயில் நுரைதள்ளியபடி மயங்கிக் கிடந்தார்.

அவர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காதலியை குத்திக் கொலை செய்த விரக்தியில் விஷம் அருந்திய அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனது தெரியவந்தது.

இரு சடலங்களையும் மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers