வெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்... பலர் பலி! கையெடுத்து கும்பிட்டு உதவி கேட்ட பிரபல நடிகை

Report Print Santhan in தெற்காசியா

கேரளாவில் கனமழை காரணமாக மக்கள் தத்தளித்து வருவதால், அவர்களுக்கு உதவி செய்யும் படி பிரபல நடிகை அமலா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

58 பேரை காணவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்துக்கு வயநாடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான அமலா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களின் பக்கத்து மாநிலத்தில் இருக்கும் நண்பர்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நிதியுதவி கொடுக்க விரும்புவோர், கேரளாவிற்கு உதவும் படி, நிதியுதவி அளிப்பதற்கான அரசாங்கத்தின் இணையதள லிங்கை பதிவேற்றம் செய்துள்ளார். அப்போது அதில் கையெடுத்து கும்பிடும் எமோஜியையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்