இந்து பெண்ணின் சடலத்தை சுமந்துசென்ற இஸ்லாமியர்கள்... ஏன் தெரியுமா? நெகிழ்ச்சி சம்பவத்தின் புகைப்படம்

Report Print Santhan in தெற்காசியா

உத்திரப்பிரதேசத்தில் இந்துப் பெண்ணின் சடலத்தை இஸ்லாமியர்கள் சுமந்து சென்ற புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பெண் சோனி(19). இவரின் தந்தை ஹேரிலால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். தாய் இதய நோயாளி.

இருவராலும் எழுந்து நடக்க முடியாது. இதனால் குடும்பத்தை சோனியின் சகோதரர்தான் காப்பற்றிவந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட சோனி, அதற்கான சிகிச்சைகளை எடுத்து வந்தார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் சோனி உயிரிழந்தார். தனி ஆளாக இருந்த சோனியின் சகோதரரால் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய முடியாமல் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார்.

இதை அறிந்த அருகில் இருக்கும் இஸ்லாமிய மக்கள், சோனிக்கு இறுதிச் சடங்கு செய்ய முன்வந்துள்ளனர். சிலர் நிதியுதவிகள் செய்ய, சிலர் களப்பணிகள் செய்தனர்.

அதுமட்டுமின்றி அனைத்துப் பணிகளையும் தாங்களாகவே முன்னின்று மேற்கொண்ட அவர்கள் இறுதிஊர்வலத்தின் போதும் சோனியை தங்கள் தோள்களில் சுமந்து சென்றுள்ளனர்.

இதிலும் இறுதிஊர்வலத்தின்போது இந்து மரபுப்படி வழக்கமாகச் சொல்லப்படும் ராம் நாம் சத்யா ஹை என்ற கோஷத்தையும் வழியெங்கும் உச்சரித்தே சென்றுள்ளனர். இதைப் பார்த்த மற்றவர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து சோனியை தோளில் சுமந்துசென்ற ஷகீல் என்பவர் கூறுகையில், இதுதான் உண்மை. இது வாழ்க்கையின் இறுதி. ஆனால் சிறிய சிறிய பிரச்னைகளுக்காக நாம் நமக்குள்ளாகவே போராடி பிரிந்துகிடக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்