எங்களை கட்டாயப்படுத்தி அவர் அப்படி செய்தார்.. கொடூரன் குறித்து கண்ணீருடன் பேசிய அனாதை சிறுமிகள்

Report Print Raju Raju in தெற்காசியா

தமிழகத்தில் காப்பகம் நடத்தி வந்த நிர்வாகி அங்கு வசித்த அனாதை சிறுமிகளிடம் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த காப்பகத்தில் 25க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி படித்து வருகின்றனர். காப்பகத்தை ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் ஆகியோர் நடத்தி வந்தனர்.

இங்குள்ள சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக புகார்கள் வந்தபோதும் காவல்துறையினர் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் திடீர் சோதனை மேற்கொண்டு, அங்கு தங்கி உள்ள 25 சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

அப்போது 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

அவர்கள், ஆதிசிவன் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியே பல ஆண்டுகள் பலாத்காரம் செய்ததாகவும் மிரட்சியோடு தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நலகமிட்டி உறுப்பினர், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் வேறு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். மற்ற சிறுமிகளும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புகாரின் பேரில் பொலிசார் ஆதிசிவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையடுத்து காப்பகத்திற்கு சீல்வைக்கப்பட்டு, மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்