கணவரின் அண்ணனின் மோசமான செயல்.. குளியலறையில் அனுபவித்த வேதனை... கண்ணீர் விட்ட புதுப்பெண்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தாரால் தான் அனுபவித்த பல்வேறு துன்பங்கள் குறித்து புதுப்பெண் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கண்ணீர் மல்க பொலிசில் புகார் ஒன்றை அவர் தெரிவித்துள்ளார். அதில், திருமணமான இந்த நான்கு மாதத்தில் நான் அனுபவித்த கொடுமைகள் மிக அதிகம்.

என் கணவர் வீட்டு குளியலறையில் என்னுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கூற அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன், இதையடுத்து அவர் என்னை அடித்து உதைத்தார்.

நான் தனியாக இருக்கும் போது என் கணவரின் அண்ணன் என்னிடம் பலமுறை தவறாக நடக்க முயன்றார்.

அதே போல என் மாமனார், மாமியார் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். முக்கியமாக நான் நள்ளிரவில் அயர்ந்து தூங்கும் போது என்னை எழுப்பி அடிப்பார்கள்.

இனியும் இவ்வளவு கொடுமைகளை பொறுக்க முடியாத நிலையில் சமீபத்தில் என் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெண்ணின் கணவர் உள்ளிட்ட நால்வர் மீதும் பொலிசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers