வெளிநாட்டில் சிறார் உள்ளிட்ட 700 பேரை சீரழித்த இந்திய வம்சாவளி இளைஞர்

Report Print Arbin Arbin in தெற்காசியா

சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது தொடர்பாக இந்திய வம்சாவளி காவலர் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் பிரசாந்த் (25) என்பவர் காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் பல இளம்பெண்களுக்கும், சிறார்களுக்கும் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பெற்றோர்களுடன் வந்து இந்த விவகாரம் தொடர்பாக அருண் பிரசாந்த் மீது புகார் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து பொலிசார் விசாரானை மேற்கொண்டனர்.

அப்போது அவரது குடியிருப்பை சோதனை செய்தபோது மொபைல் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவையில் 700-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசபடங்கள் இருந்துள்ளன.

இதைத்தொடர்ந்து பொலிசார் அருண்பிரசாந்த்தை கைது செய்து அவரது வேலையையும் பறிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நேற்று சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இருந்த நீதிபதி வழக்கை விசாரித்து அருண் பிரசாந்த் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் அவர் மீதான 21 குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளதால், தண்டனை காலம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers