அப்பா எதையோ குடிக்கச் சொல்றாங்க.. போனில் கதறிய மகள்! நேரில் சென்ற தந்தைக்கு காத்திருந்த காட்சி

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் வரதட்சனை கொடுக்காததால், 21 வயது பெண்ணின் வாயில் ஆசிட் ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் சர்மா. இவருக்கு யசோதா தேவி(21) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் யசோதா தேவிக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் திகதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பஹேதியைச் சேர்ந்த ஓம்கர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணமான சில நாட்களிலேயே கொடுத்த வரதட்சணை போதவில்லை என்று கூறி யசோதாவை, ஓம்கர் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அதோடுமட்டுமின்றி, வரதட்சணை வாங்கி வர சொல்லி யசோதாவை, அவரது தாய் வீட்டிற்கு விரட்டியடித்துள்ளனர்.

இதனால் தாய் வீட்டிற்குச் சென்ற யசோதா, தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை தடுப்புசட்டத்தின் கீழ் காவல்துறையில் புகார் அளித்தார்.

அப்போது இது தொடர்பான வழக்கு நிதிமன்றத்தில் விசாரணைத்து வந்த போது, யசோதாவை தன்னோடு அழைத்துச் செல்ல, ஓம்கார் ஒப்புக்கொண்டார்.

வீட்டிற்கு அழைத்துச்சென்ற சில நாட்களில் மீண்டும் யசோதாவை, ஓம்கார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த துவங்கியுள்ளனர்.

இதனால் சில தினங்களுக்கு முன்பு, யசோதாவின் சகோதரர் மனிஷ், 20,000 ரூபாய் செலவு செய்து அவர்களுக்கு இன்வெர்ட்டர் ஒன்றை வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

அதன் பின் மீண்டும் யசோதாவை துன்புறுத்தியுள்ளனர்.

இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை காலை, தந்தை கிரிஷ் சர்மாவிற்கு போன் செய்த யசோதா, தன் கணவர் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி எதையோ குடிக்க சொல்கின்றனர் என்று கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிரிஷ் சர்மாவும், மனிஷும், காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, யசோதா தங்கியிருந்த பஹேதிக்கு விரைந்தனர். அங்கு சென்றபோது தரையில் மயங்கிய நிலையில், யசோதாவைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அங்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் காணவில்லை. இதனால் உடனடியாக யசோதாவின் தந்தை, அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால் யசோதவின் உடலை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூற, குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து பஹேதி பொலிசார் கூறுகையில், அந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் தலைமறைவானதால், இது வரதட்சணைக்காக நிகழ்த்தப்பட்ட கொலைதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. யசோதாவின் குடும்பத்தினரிடமிருந்து எழுத்துப்பூர்வமான புகார் பெற்றதும் ஓம்கார் குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்