இன்று இந்தியாவில் நாடு முழுவதும் 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் போது பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றிய போது ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசியுள்ளார்.
இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.
இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நாளான இன்று கருப்பு நாளாக அனுசரித்துள்ளது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
மேலும் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது படத்திற்குப் பதிலாக கருப்பு கலரை பிரோபைல் போட்டோவாக பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.