இந்தியா-பாகிஸ்தான் மோதல்..! எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்: 4 பாகிஸ்தான் வீரர்கள்.. 5 இந்திய வீரர்கள் பலி

Report Print Basu in தெற்காசியா

இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள சர்ச்சைக்குரிய காஷ்மீர் எல்லை பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே தொடர் துப்பாக்கிச் சூடு மோதல் நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய நீக்கியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை கோட்டை தாண்டி இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில, பாகிஸ்தான் நிர்வாகிக்கும் காஷ்மீரில் மூன்று ராணுவ வீரர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இந்திய நிர்வாகிக்கும் காஷ்மீரில் நிலவும் மோசமான சூழ்நிலையில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியில், இந்திய ராணுவம் எல்லையில் தொடர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில், 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்ததில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், பல பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. இடையிடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்