மண்ணில் கொத்தாக புதைந்த 57 பேர்: பரிதவிக்கும் கடவுளின் தேசம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 57 பேர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கவளப்பாறை, புத்துமலை பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அதிநவீன உபகரணங்கள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது கடும் மழைப்பொழிவையும் அதனூடே நிலச்சரிவையும் ஏற்படுத்தி பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

மலப்புரம், வயநாடு, இடுக்கி உள்பட 8 மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஏராளமான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்துள்ளது.

மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை, வயநாடு மாவட்டம் புத்துமலை ஆகிய பகுதிகள் நிலச்சரிவால் பெரிய அளவு பாதிப்பை சந்தித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலியாகி உள்ளனர். கவளப் பாறையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 33 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கவளப்பாறை, புத்து மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 57 பேர் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அதிநவீன உபகரணங்கள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்