கற்களால் தங்களையே தாக்கிக்கொண்ட கிராம மக்கள்: எதற்காக தெரியுமா?

Report Print Arbin Arbin in தெற்காசியா
83Shares

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சம்பவாட் பகுதியில் நடைபெறும் பக்வால் மேளா எனப்படும் வித்தியாசமான திருவிழாவிலேயே அங்குள்ள கிராம மக்கள் கற்களால் தாக்கியுள்ளனர்.

சம்பவாட் பகுதியில் ஆண்டுதோறும் இந்த விசித்திரமான விழாவானது கொண்டாடப்படுகிறது.

பக்வால் மேளா எனப்படும் இந்த திருவிழாவில் மக்கள் இரு அணியாக பிரிந்து கொண்டு கற்களை வைத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொள்கின்றனர்.

அப்படி தாக்கிக் கொள்வதால் நிலத்தில் சிந்தும் ரத்தம், கடவுளுக்கு அளிக்கும் காணிக்கை என நம்பப்படுகிறது.

கடந்த வியாழனன்று நடைபெற்ற பக்வால் மேளா திருவிழாவில் சுமார் 100 பேருக்கு காயம்பட்டதாக கூறப்படுகிறது.

வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த விழா தொடர்பில் கற்களை பயன்படுத்தி தாக்கிக்கொள்ள கூடாது என முன்னரே மாவட்ட நிர்வாகம் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்