வயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in தெற்காசியா

அவ்வப்போது வறும் வயிற்று வலியை அலட்சியம் செய்த ஒரு இளம்பெண், ஒரு கட்டத்தில் மருத்துவர்களிடம் சென்றபோது அவரது பிரச்சினை மிக அபூர்வமானது என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத அந்த 17 வயது இளம்பெண்ணுக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்படுவதுண்டு.

17 ஆண்டுகள் தாக்குப்பிடித்த அந்த பெண் இறுதியாக மருத்துவர்களிடம் சென்றபோது, மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஒரு கட்டி இருப்பதை அறிந்தனர்.

பின்னர் அந்த கட்டியை ஆராய்ந்தபோது, அதில் பற்கள், எலும்புகள் மற்றும் தலைமுடி ஆகியவை இருப்பதை மருத்துவர்கள் கண்டனர்.

பின்னர்தான் தெரியவந்தது, அந்த சிறுமி தனது தாயின் வயிற்றில் இருக்கும்போது, அவர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவராக இருந்திருக்கிறார்.

அவருடன் வளர்ந்த மற்றொரு இரட்டைக் குழந்தை, ஒரு காலகட்டத்தில் அவரது வயிற்றுக்குள்ளேயே இழுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அபூர்வம் என்ன வென்றால், 500,000இல் ஒருவருக்குத்தான் இப்படி நிகழும். அதுவும் பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்குத்தான் இப்படி நடக்கும்.

அதுவும் இவ்வளவு வளர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் இப்படி ஒரு கரு காணப்படுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

பின்னர் அந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த இளம்பெண், நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்