திருமணத்தில் கூடிய சொந்த பந்தங்கள்... மண்டபத்தோடு வெடித்து சிதறிய கோரம்: காபூலில் பயங்கரம்

Report Print Basu in தெற்காசியா

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள திருமண மண்டபத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றன.

திருமண விழாவின் போது தற்கொலை தாக்குதல்தாரி வெடிபொருட்களை வெடிக்க செய்ததாகவும், மண்டபத்தில் பல சடலங்களை பார்த்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் கூறினர். தாக்குதலின் போது நூற்றுக்கணக்கான மக்கள் மண்டபத்தின் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். எனினும், தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ஷியா குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதியில் உள்ளூர் நேரம் இரவு 10:40 மணிக்கு இந்த தற்கொலை தாக்குதல் நிகழ்ந்தது.எந்தவொரு குழுவும் இந்த தாக்குதலை நடத்தியதாக தற்போது கூறவில்லை.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஷியா ஹசாரா சிறுபான்மையினரை தலிபான் மற்றும் ஐ.எஸ் குழு உள்ளிட்ட சுன்னி போராளிகள் பலமுறை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

10 நாட்களுக்கு முன் காபூல் காவல் நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலை நடத்தியதாக தலிபான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான படைகளை கொண்டிருக்கும் தலிபான் மற்றும் அமெரிக்கா ஆகியவை சமாதான ஒப்பந்தத்தை அறிவிப்பதற்கு விருப்பமாக இருந்தாலும் நாட்டில் பதற்றம் அதிகமாக உள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்