கணவரின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட மனைவி: வீதிக்கு வந்த குடும்ப சண்டை

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவில் ராணுவ வீரரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த நபருக்கு அவரது மனைவியாலையே அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளது.

தமது கணவர் அவரது காதலியுடன் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றி அவர் பழி தீர்த்துள்ளார்.

ராணுவ வீரர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார் குறிப்பிட்ட நபர். இதனால் அவரது மனைவியுடனும் நட்பில் இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ராணுவ வீரரின் மனைவியுடன் இவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர் பணி நிமித்தம் வெளியே செல்லும் காலங்களில் இவர்கள் உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை அந்த நபர் சேமித்து வைத்துக் கொண்டுள்ளார்.

இதனிடையே அந்த புகைப்படங்களை, அவரது மனைவி பார்க்க நேர்ந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர் உடனடியாக தமது கணவரின் தகாத உறவை அம்பலப்படுத்த, அந்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அந்த ராணுவ வீரர் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ரமேஷ் என கூறப்படும் அந்த நபரிடம் இருந்து பயன்படுத்திய பைக் ஒன்றை தொடர்புடைய ராணுவ வீரர் வாங்கியுள்ளார்.

ரமேஷ் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் முகவரகா இருந்து வருகிறார்.

அவரிடம் இருந்து பைக் ஒன்று வாங்கிய நிலையிலேயே இருவரும் நண்பர்கள் ஆனதும், ராணுவ வீரரின் மனைவியுடன் ரமேஷ் தகாத உறவை ஏற்படுத்தியதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்