ஆபாச படங்களால் பிரபலமான பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா?

Report Print Balamanuvelan in தெற்காசியா

ஆபாசப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் பிரபலமான ஒரு இளம்பெண்ணை அவரது சகோதரர்கள் கௌரவக்கொலை செய்ய, அவர்களை அவர்களது பெற்றோர் மன்னித்ததையடுத்து அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த Qandeel Baloch (26) தனது ஆபாசப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கம்.

அவரை 123,000பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். அத்துடன், பல ஆண்டுகளாக பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் ஒரு நாட்டில் துணிச்சலாக தனது கவர்ச்சிப்படங்களை வெளியிடும் ஒரு இளம்பெண்ணை பல இளைஞர்கள் துணிச்சல் மிக்க ஒரு புதுமைப்பெண்ணாக பார்த்தார்கள்.

இது போதாதென்று, Qandeel பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிவிப்பது, முக்கிய மதத்தலைவர் ஒருவருடன் கவர்ச்சி போஸ் கொடுப்பது என பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம், தங்கள் குடும்ப கௌரவத்தை Qandeel கெடுப்பதாகக்கூறி, அவரது சொந்த சகோதரனாகிய Waseem Baloch என்பவர் அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.

அவருடன் அவரது சகோதரரான Aslam Shaheenம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள்.

பாகிஸ்தானில், ஒரு வித்தியாசமான சட்டம் உண்டு, அதன்படி ஒருவர் தனது குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவினர் ஒருவரைக் கௌரவக்கொலை செய்யும்போது, அதே குடும்பத்திலுள்ள மற்றொரு உறவினர் அவர்களை மன்னித்துவிடலாம்.

பின்னர் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த சட்டம் நீக்கப்பட்டது. எனவே, Qandeel கொல்லப்படும்போது அந்த சட்டம் அமுலில் இல்லை என்பதை மேற்கோள் காட்டி, Qandeelஇன் சகோதர்களை அவர்களது பெற்றோர் மன்னித்துவிட்டதாகவும், எனவே வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் Qandeelஇன் பெற்றோர் கோரியுள்ளனர்.

இதனால் கொலையாளிகள் விடுவிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்