இலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு வருந்திய அருண்ஜெட்லி! அவரின் அரிய புகைப்படங்கள்

Report Print Raju Raju in தெற்காசியா

இலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காக வருந்தியது, ஜெயலலிதா மீது தனிப்பட்ட பாசம் வைத்திருந்தது என அமைச்சராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராகவும் இருந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி.

பா.ஜ.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பல கட்சியிலும் நண்பர்கள் இருந்தனர்.

அதிலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அருண் ஜெட்லியும் நல்ல நண்பர்கள்.

அருண் ஜெட்லி இன்று மரணமடைந்தார் என்ற தகவல் கிடைத்ததும் அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார்.

அதில், அன்பு சகோதரர் அருண் ஜெட்லி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் தருகிறது.

அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. ஜெயலலிதா மீது அவர் தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர். அவரும் அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என கூறியுள்ளார்.

அருண் ஜெட்லி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார்.

அரசியல்வாதி, வழக்கறிஞர், அமைச்சர் என பன்முகத்தனையோடு விளங்கிய அருண் ஜெட்லியின் அரசியல் பயணம் புகைப்படங்களாக இதோ,

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்