வெளிநாட்டிலிருந்து வந்து நூதனமாக இளைஞர்கள் செய்த செயல்... விசாரணையில் தெரிந்த தகவல்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவின் பல்வேறு இடங்களில் மணி எக்சேஞ்ச் நிறுவனங்களில் வெளிநாட்டு பணம் மாற்றுவது போல நடித்து நூதன திருட்டில் ஈடுபட்ட வெளிநாட்டை சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அதிக அளவிலான வெளிநாட்டினர் வருகை காரணமாக வெளிநாட்டு பணம் மாற்றும் முகவர்கள் பலர் அப்பகுதியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 21-ஆம் திகதி கவுகாத்தி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற பணம் மாற்றும் நிறுவனத்துக்கு வந்த 2 ஈரான் நாட்டுக்காரர்கள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணம் கேட்டுள்ளனர்.

அப்போது கடையில் இருந்தவரின் கவனத்தை திசை திருப்பி, அவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் கல்லாவில் இருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாயை எடுத்து சாதுர்யமாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து சென்றுள்ளனர்.

இது அங்கிருக்கும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. திருடிய பணத்தை அவர்கள் மாற்றிக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதேபோன்று வேறு சில மணி எக்சேஞ்ச் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தகவல் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மீண்டும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மற்றொரு கடைக்கு வந்த கொள்ளையர்கள் அதேபாணியில் கொள்ளை முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில் எச்சரிக்கையடைந்த கடைக்காரர், காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

தப்பியோட முயன்ற இருவரையும் அப்பகுதி மக்கள் உதவியுடன் பிடித்து பொலிசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பெயர் மொஹ்ஸன் இலாஹி, அமீர் அலி ஆசாதி என்றும், இவர்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதேபாணியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்