திருமணத்திற்கு முன் ஒத்திகை பார்க்கலாம்... உறவுக்கு அழைத்த நபரை தனியாக அழைத்து இளம்பெண் செய்த செயல்

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் திருமணம் நிச்சயமான பெண்ணை உறவுக்கு அழைத்த வாலிபரை அப்பெண் தனியாக அழைத்து அடித்து உதைத்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தென்தாமரைக்குளம் அருகே பழக்கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஒரு வீட்டுக்கு வாழை குலை வாங்குவதற்காக அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த இளம்பெண்ணும் இவரிடம் சாதாரணமாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

இதனால் குறித்த நபர் தன்னிடம் சாதாரணமாக பழகிய இந்த பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கினார்.

அதன் பின் திடீரென இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, நான் உனக்கு நிறைய விஷயங்கள் சொல்லி தருகிறேன். திருமணத்துக்கு முன் ஒரு ஒத்திகை பார்க்கலாம், நீ வருகிறாயா? என கேட்டுள்ளார்.

இதை புரிந்து கொண்ட அந்த பெண், உடனடியாக போனை துண்டித்துள்ளார். இது குறித்து காவல்நிலையத்திலோ, உறவினர்களிடமோ கூறினால் எதுவும் செட் ஆகாது என்று எண்ணிய அப்பெண், அவரை எதாவது செய்ய வேண்டும் என்று கூறி, அவரின் எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்டு குறித்த இடத்திற்கு(தென்னந்த தோப்பு) தனியாக வரும்படி கூறியுள்ளார்.

இதனால் நாம் நினைத்தது நடந்துவிட்டது என்று நம்பி சென்ற போது, அந்த பெண் அவரை அங்கு அடித்து நொறுக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அந்த நபர் ஓடும் போது, இவர் என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகிறது.

உன் மனைவியை இப்படி எவனாது கேட்டால் நீ சும்மா இருப்பீயா? திருமணத்துக்கு முன் உன் மனைவியை டி இப்படி ஒத்திகை பார்த்து இருந்தால் உனக்கு எப்படி இருக்கும்.

உன் மகள் அல்லது உன் தங்கையை இப்படி திருமணத்துக்கு முன் ஒத்திகை பார்க்க அனுப்பி வைப்பீயா? என தாக்கிக் கொண்டே, தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

இதைக் கண்டவுடன் அந்த வாலிபர அவரிடம் ஆடி வாங்கிய படியே ஓட, உடனே அவர் என்னிடம் மட்டும் அடி வாங்குகிறாயா? இல்லை ஊரை கூட்டி அடி வாங்குகிறீயா? என கேட்டதும் ஓடுவதை நிறுத்தி விட்டு இளம்பெண்ணிடம், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நான் செத்து விடுவேன் என அந்த நபர் கூறுகிறார்.

அதற்கு அந்த இளம்பெண் நீ செத்து போ, சாதாரணமாக பழகிய ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைக்கும் நீ உயிருடன் இருக்க கூடாது.

ஒழுங்கு மரியாதையாக இரு, உனக்கு அப்படி பெண் சுகம் கேட்கிறதோ. இரு பெண் குழந்தைகளை வைத்துள்ள நீ, ஏன் இப்படி அலைகிறாய் என கூறியவாறு தாக்குகிறார்.

இப்படி சுமார் 6 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களிலும் இ வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில் இளம்பெண்ணின் முகம் பதிவாக வில்லை. அந்த நபரின் முகம் தெளிவாக தெரிகிறது.

தற்போது அந்த நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்