வயிற்று வலியால் துடித்த சிறுமி... பரிசோதனைக்கு பின் மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் வயிற்று வலியால் துடித்த 12 வயது மகளை, அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்து பார்த்த போது, அவர் சொன்ன தகவலால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங்கிற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது மருத்துவர்கள் விசாரித்த போது, சிறுமியின் வகுப்பு ஆசிரியர் கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததோடு, பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதால், வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாகியுள்ள ஆசிரியரை தீவிரவமாக தேடி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்