பாகிஸ்தான் வான்வெளிபாதையில் இந்தியாவிற்கு முழுவதும் தடை!

Report Print Kavitha in தெற்காசியா

பாகிஸ்தானின் வான் எல்லையில் இந்திய - ஆப்கானிஸ்தான் விமானங்கள் பறக்க முழுவதும் தடை செய்யவும், வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்யவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

குறித்த தகவலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்தும், இந்தியாவிற்கு செல்லும் விமானங்களுக்கான பாக்கிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாத படி, வான்வழி பாதையை மூடுவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஃபவாத் சவுத்ரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஃபவாத் சவுத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுவதாவது, “செவ்வாய்கிழமை பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் இதற்கான சட்ட முறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மோடி துவக்கி வைத்ததை நாங்கள் முடித்து வைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்தததை எதிர்த்து பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியதுடன் ரயில் மற்றும் பேருந்து சேவைகளை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்