மோடியின் பெயரை கூறும்போது பாகிஸ்தான் அமைச்சரை தாக்கிய மின்சாரம்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in தெற்காசியா

பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்திய பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடும்போது மைக்கில் இருந்து மின்சாரம் லேசாக தாக்கியது.

பாகிஸ்தானின் ரெயில்வே அமைச்சராக உள்ளவர் ஷேக் ரஷீத் அகமது. இவர் மக்கள் கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது, உங்கள் நோக்கங்களை நாங்கள் அறிவோம் எனக் கூறி, பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்தை அவர் கூறும்போது, கையில் இருந்த மைக்கில் ஷாக் அடித்தது.

அதனால் சற்று அதிர்ந்த அவர் மீண்டும் பேச்சை தொடர்ந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முன்னதாக, ராவல்பிண்டியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஷேக் ரஷீத், ‘காஷ்மீர் போராட்டத்திற்கு இறுதியான நேரம் வந்துவிட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான கடைசி யுத்தமாக இருக்கும்’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்