வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த இளம் தம்பதி... நள்ளிரவில் நடந்த கனவிலும் நினைக்காத துயர சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் தம்பதி மீது நள்ளிரவில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் Pratapgarh மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிவ் பகதூர் சரோஜ் (26). இவர் மனைவி கன்யா தேவி (24).

இருவரும் நேற்று முன்தினம் இரவு தங்கள் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கி கொண்ட இருவரும் அலறினார்கள்.

இதையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சரோஜ் மற்றும் கன்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்