பள்ளத்தில் கவிழவிருந்த பேருந்தை காப்பாற்றிய யானை? வைரலாகும் புகைப்படத்தின் உண்மை நிலை!

Report Print Kabilan in தெற்காசியா

இந்தியாவில் பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை, யானை ஒன்று தடுத்து நிறுத்தி காப்பாற்றியதாக புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அதன் உண்மை நிலை தற்போது தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் யானை ஒன்று பள்ளத்தில் கவிழவிருந்த பேருந்தை காப்பாற்றியதாகவும், உத்தரகாண்டில் இச்சம்பவம் நடந்ததாகவும் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

பேருந்தை யானை ஒன்று முன்னால் நின்று தடுத்து நிறுத்துவதைப் பார்த்து பலரும் நெகிழ்ச்சியுடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்து, கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் இந்தியாவிலேயே நடக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட புயலின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

அத்துடன், பயிற்சி பெற்ற யானை ஒன்று சேற்றில் சிக்கிய பேருந்தை மீட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்றும், இந்தியாவுக்கும் இந்த புகைப்படத்திற்கும் தொடர்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை யாரோ தவறான தகவலுடன் பகிர்ந்துள்ளனர். அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் பலரும் அதனை பகிர்ந்து வந்துள்ளனர் என்று சமூக வலைதள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்