வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.. தமிழர் சிவனை புகழ்ந்த பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை!

Report Print Kabilan in தெற்காசியா

சந்திரயான்-2 விண்வெளித் துறையில் பெரிய பாய்ச்சல் என்று பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனையான நமீரா சலீம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ‘சந்திரயான்-2’ விண்கலத்தை நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்ய அனுப்பியது.

ஆனால், அதில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டு அறைக்கு signal கிடைக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, சுற்றுவட்டப் பாதையில் இருந்த ஆர்பிட்டர், நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படமாக எடுத்து அனுப்பியது. அதனுடன் தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

லேண்டரிடம் இருந்து தகவல் கிடைக்காத போது மிகுந்த வருத்தமடைந்த இஸ்ரோ தலைவர் சிவன், பின்னர் விக்ரம் லேண்டர் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதன் பின், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா உட்பட பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், பாகிஸ்தான் அறிவியல் அமைச்சர் பவத் சவுத்ரி கிண்டல் செய்து ட்வீட் பதிவிட்டார்.

எனினும், பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனையான நமீரா சலீம், இஸ்ரோ தலைவர் சிவன் உட்பட இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘இந்தியா மற்றும் இஸ்ரோவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிக்கு பாராட்டுக்கள். ‘சந்திரயான்-2’ நிலவு ஆராய்ச்சியில் தெற்காசியாவில் மட்டுமல்லாமல், விண்வெளி துறையிலும் பெரிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.

தெற்காசியாவில் விண்வெளித்துறையில் பிராந்திய முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. விண்வெளி ஆய்வை எந்த நாடு வழி நடத்துகிறது என்பது முக்கியமல்ல. பூமியின் அரசியல் எல்லைகள் நம்மை பிரித்தாலும், விண்வெளி நம்மை இணைக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers