பெண்ணின் மண்டையோட்டுக்குள் நுழைந்த குக்கர் விசில்: ஒரு கண்ணை இழந்த சோகம்!

Report Print Balamanuvelan in தெற்காசியா

குக்கரில் தால் சமைத்துக் கொண்டிருந்த இந்தியாவின் ஜார்க்கண்டைச் சேர்ந்த ஒரு பெண் அதை முற்றிலும் மறந்துபோனார்.

தோட்டத்தில் வைக்கோல் வெட்டும் இயந்திரத்தின் சத்தத்தால், குக்கர் விசில் சத்தம் கேட்காமல் போக, பின்னர் நினைவு வந்தவராய் சமையலறைக்குள் ஓடியிருக்கிறார் Munda Birsi (57).

அவர் குக்கர் விசிலை அகற்ற முற்படும்போது, அது வெடித்து அவரது நெற்றியை தாக்கியிருக்கிறது.

இடது கண்ணின் அருகே மண்டையோட்டை துளைத்துக்கொண்டு உள்ளே சென்று பதிந்துள்ளது 7 சென்றிமீற்றர் நீளமுள்ள அந்த விசில்.

இரத்த கொட்ட, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் Birsi.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்களிடம் அறுவை சிகிச்சை செய்ய போதுமான உபகரணங்கள் இல்லாததால் 56 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு Birsiயை அனுப்பியிருக்கிறார்கள்.

அங்குள்ள மருத்துவர்கள் அந்த விசில் வெளியே தெரியாததால் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள், அதற்கு பின்னர்தான் அவரது நெற்றியில் பதிந்திருந்த விசிலை அவர்களால் பார்க்க முடிந்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்குப்பின் அறுவை சிகிச்சை செய்து அந்த விசிலை அகற்றியுள்ளார்கள் மருத்துவர்கள்.

நெற்றிப்பொட்டை அந்த விசில் தாக்கியிருந்தால் Birsi ஒரு வேளை உயிரிழந்திருக்கக்கூடும்.

தங்களால் Birsiயின் உயிரைக் காப்பாற்ற முடிந்தாலும், அவரது இடது கண்ணை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்கிறார்கள் அந்த மருத்துவர்கள்.

ஒரு நாள் ஓய்வுக்குப்பின் Birsi வீடு திரும்பினாலும், அவரால் இனி அவரது இடது கண்ணை பயன்படுத்தவே முடியாது.

இனி நிச்சயம் அடுப்பில் எதையாவது வைத்தால் அவர் மறக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers