மனைவி, மகள் வசதியாக வாழ இளைஞரின் பதற வைக்கும் செயல்: விசாரணையில் அம்பலமான பின்னணி

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தமது குடும்பதை காப்பாற்றுவதற்காக கூலிப்படை மூலம் தனது வாழ்க்கையை முடித்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா பகுதியில் வசித்து வந்தவர் 38 வயதான பல்பீர் கரோல். பல்பீருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.

இவர் தனது பகுதியில் வட்டிக்கு பணம் தந்து சம்பாதிக்கும் தொழில் செய்துவந்தார். இந்நிலையில், கரோல் தனது வீட்டின் அருகே உள்ள காட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 2 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கொலையான நபரின் செல்போன் அழைப்புகள் மற்றும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த பொலிசார்,

அப்பகுதியில் உள்ள ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் என்ற இரண்டு நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

வட்டி தொழில் செய்துவந்த பல்பீர் கரோல் சுமார் 20 லட்சம் ரூபாய்வரை பலருக்கு வட்டிக்கு வழங்கியுள்ளார்.

ஆனால் அவரிடம் பணத்தை வாங்கிய நபர்கள் யாரும் உரிய முறையில் வட்டி செலுத்தாமலும் குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பி அளிக்காமலும் போனதால் கடுமையான நஷ்டம் மற்றும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார் கரோல்.

பணத்தை இழந்த கரோல் தனது குடும்பத்தினர் யாரும் எதிர்காலத்தில் கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என விரும்பினார்.

தொடர்ந்து தனியார் வங்கி ஒன்றில் தனது பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதற்கான முதல் தவணை தொகையை செலுத்தினார். மேலும், தான் இறந்தால் பாலிசி பணம் அனைத்தும் தனது குடும்பத்தினரை அடைய வேண்டும் என அவர்களது பெயர்களை வாரிசுதாரர் பெயர்களில் சேர்த்துள்ளார்.

இதை தொடர்ந்து, ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் ஆகிய இருவரை ஏற்பாடு செய்து தன்னை கொலை செய்தால் ரூ. 80 ஆயிரம் தருவதாக கூறி உறுதியளித்து அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரம் பணத்தை பல்பீர் கரோல் வழங்கியுள்ளார்.

திட்டமிட்டபடி கடந்த 2 ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுக்குள் தான் ஏற்பாடு செய்த இருவருடன் சென்ற பல்பீர் ஹரோல் தன்னை கொலை செய்து விட்டு தனது பையில் இருக்கும் மீதி பணம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதனால், ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் ஆகிய இருவரும் பல்பீர் கரோலின் கை, கால்களை கட்டிவிட்டு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

தற்போது கொல்லப்பட்ட பல்பீர் கரோலின் செல்போன் உரையாடல்கள் மற்றும் சிசிடிவி உதவியுடன் கொலையாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தனது மனைவியும் குழந்தையும் ஏழ்மையை அனுபவிக்க கூடாது என்ற காரணத்துக்காக ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்