கணவருடன் போனில் பேசிவிட்டு தூக்கில் தொங்கிய மனைவி! அதன்பின்னர் நடந்த யாரும் எதிர்பாராத துயர சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் பெற்றோர் மிரட்டியதால் கணவனும் பயந்து தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்தவர் அஷோக் ஜாதவ் (33). இவருக்கு திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அஷோக்கின் மனைவி உயிர்கொல்லி நோயால் உயிரிழந்தார்.

இதையடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வைஷாலி (29) என்ற பெண்ணை அஷோக் மணந்தார்.

இந்நிலையில் நேற்று அஷோக் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர தாமதமானது. இதையடுத்து அவருக்கு போன் செய்த வைஷாலி கணவரிடம் சண்டை போட்டார்.

பின்னர் எட்டு மணியளவில் அஷோக், வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்ட பின்னர் மீண்டும் நண்பர்களை காண வெளியில் சென்றார்.

இதையடுத்து இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீடு இருட்டாக இருந்தது. விளக்கை போட்டு அஷோக் பார்த்த போது வைஷாலி வீட்டு உத்தரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அஷோக் தனது மாமனார், மாமியாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்து வந்த அவர்கள் மகள் சடலத்தை பார்த்த அழுததோடு தற்கொலைக்கு காரணம் அஷோக் தான் என குற்றஞ்சாட்டினர்.

மேலும் பொலிசில் புகார் கொடுத்து சிறையில் தள்ளுவோம் என அவரை மிரட்டினர்.

இதனால் பயந்து போன அஷோக் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்