மனைவிக்கு நடந்த பிரசவம்! குழந்தை என் ஜாடையில் இல்லை என கதறிய கணவன்... வெளியான முழு பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் தங்களுக்கு பிறந்த குழந்தையை கொடுக்காமல் வேறு குழந்தையை கொடுத்ததாக மருத்துவமனை மீது பெற்றோர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் தீக்லி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் திகதி குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த ஒரு மணி நேரம் வரை தாயிடம் குழந்தையைக் காட்டவேயில்லை. குழந்தையின் பாலினம் குறித்து கேட்டபோதும் சரியான பதிலளிக்கவில்லை.

ஒரு மணிநேரத்துக்குப் பின், செவிலியர் ஒருவர் பெண் குழந்தை ஒன்றைக் கொண்டுவந்து, இதுதான் உங்கள் குழந்தை என்று தந்தையிடம் கொடுத்துள்ளார். அதைப் பார்த்த குழந்தையின் தாய்க்கு, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அந்தக் குழந்தை பார்ப்பதற்கு 7 நாள் கைக் குழந்தையாக இருந்துள்ளது. அவர் கூறுகையில், பிப்ரவரி 7-ம் திகதி எனக்கு பிரசவம் நடைபெற்றது.

ஒரு மணி நேரத்துக்கு பின்னர் பெண் குழந்தை ஒன்றை எடுத்து வந்தனர். ஆனால், அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது எனக்கு சந்தேகம் இருந்தது. நான் மூத்த மருத்துவர்களிடம் இது தொடர்பாகப் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

வேறு வழியில்லாமல் அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டோம்.

பெண்ணின் கணவர் கூறும்போது, அந்தக் குழந்தை எங்கள் இருவரில் ஒருவரின் ஜாடையைக் கூட ஒத்திருக்கவில்லை.

நான் இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது என் மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்தபோது, அங்கு ஒரு ஆண் குழந்தை மட்டும் தனியாக இருப்பதைப் பார்த்தேன்.

ஆனால், அந்தக் குழந்தையைப் பெற்ற தாய் யாரும் அங்கில்லை என்றார்.

இது தொடர்பான புகாரின் பேரில் குறித்த தனியார் மருத்துவமனைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிப்ரவரி 7-ம் திகதி அன்று ஒரேயொரு பிரசவம் மட்டும் அங்கு நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்