வெளிநாட்டில் உள்ள கணவருடன் போனில் பேசி கொண்டிருந்த மனைவி... படுக்கையில் இருந்த பாம்புகளால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in தெற்காசியா

வெளிநாட்டில் வசிக்கும் கணவருடன் போனில் பேசி கொண்டே படுக்கையில் இருந்த பாம்புகள் மீது உட்கார்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். இவர் மனைவி கீதா.

ஜெய்சிங் தாய்லாந்தில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று கீதா தனது வீட்டு படுக்கையில் உட்கார்ந்து கொண்டு ஜெய்சிங்கிடம் போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது படுக்கையின் மீது இரண்டு பாம்புகள் ஏறிய நிலையில் ஒன்றோடு ஒன்று பிணைந்து விளையாடி கொண்டிருந்தது.

இதை பார்க்காத கீதா அதன் மீது உட்கார்ந்தார், இதையடுத்து பாம்புகள் அவரை கொத்தியது.

வலியால் துடித்த கீதாவை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனிடையில் இந்த சம்பவத்துக்கு பின்னரும் பாம்புகள் படுக்கையில் விளையாடி கொண்டிருந்ததை பார்த்த குடும்பத்தார் ஆத்திரத்தில் அதை அடித்து கொன்றனர்.

கணவரோடு போனில் பேசி கொண்டிருந்த போது இளம்பெண் பாம்புகள் கடித்து உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்