சத்தமாக சிரித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Report Print Kabilan in தெற்காசியா

சீனாவில் சத்தமாக சிரித்த பெண்ணுக்கு தாடை ஒரு பக்கமாக திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள கவாங்ஸோவ் தெற்கு ரயில் நிலைத்திற்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் சென்றுகொண்டிருந்தார்.

அவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அப்பெண், திடீரென சத்தமாக சிரிக்கத் தொடங்கினார். இதனால் அவரது தாடை ஒரு பக்கமாக திரும்பி நின்றுவிட்டது. இதன் காரணமாக கடுமையான வலியில் துடித்த அவர், தனது தாடையை திருப்ப முயன்றுள்ளார்.

ஆனால், அவரால் முடியாத நிலையில் கண்களில் கண்ணீர் மட்டும் வந்துள்ளது. இந்நிலையில், அதே ரயிலில் பயணித்த லுயோ வென்ஷெங் என்ற மருத்துவரிடம், குறித்த பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்யபடி சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணுக்கு சிகிச்சை செய்ய லுயோ சென்றுள்ளார். அவரிடம் பேச்சு கொடுத்தபோது, பெண்ணின் தாடை ஒரு பக்கமாக நின்றுவிட்டதை அறிந்துள்ளார் லுயோ. பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்து சரி செய்தார்.

இந்நிலையில் மருத்துவர் லுயோ வென்ஷெங் கூறுகையில், ‘அந்தப் பெண்ணால் பேச முடியாமலும், வாயை மூட முடியாமலும் இருப்பதை சிறிது நேரத்திற்குப் பிறகு தான் அறிந்தேன். பிறகு சிகிச்சை செய்தேன். அது சரியாக அதன் இடத்திற்கு வந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஏற்கனவே தான் கர்ப்பமாக இருந்தபோது ஒருமுறை, இதுபோல தாடை நின்றிருக்கிறது என்று தெரிவித்துள்ள அப்பெண், தனக்கு உதவிபுரிந்த மருத்துவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்