ஏழு வயது மகன் கண்முன்னால் இளம் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! அதிகாலை 3.55 மணிக்கு நடந்த சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் 7 வயது மகன் கண் முன்னால் அவன் பெற்றோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் எடாவா பகுதியைச் சேர்ந்த தம்பதி விக்ரம் சிங் - ஜோதி. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளான்.

இவர்கள், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள உத்யோக் நகரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை, சிங்கும் அவர் மனைவியும் கொல்லப்பட்டு கிடப்பதாகவும் கொலைகாரன் வீட்டிலேயே இருப்பதாகவும் பொலிசுக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அங்கிருந்த அபினவ் அகர்வால் என்பவரை கைது செய்தனர்.

பின்னர் சிங்கும், ஜோதியும் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட சிங்குடன் சில வருடங்களுக்கு முன் வேலை பார்த்தவர் அபினவ்.

சிங்குக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரிடம் ரூ.1.5 லட்சத்தை வாங்கியிருந்தார் அகர்வால்.

ஆனால், வேலை வாங்கி தராததால் பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார், சிங். இது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரச்னையை பேசி தீர்க்கலாம் என சிங் வீட்டுக்கு வந்த அகர்வால் அவருடன் சேர்ந்து மது அருந்தினார்.

பின்னர் சிங் வீட்டிலேயே அகர்வால் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.55 மணியளவில் சிங்கின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அது இரண்டாவது தளத்தில் இருக்கும் வீடு என்ற நிலையில் கீழே வசிப்பவர்கள் சத்தம் கேட்டு மேலே வந்தனர்.

அப்போது மாடிப்படியில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலே சென்றபோது, படியில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார் ஜோதி.

உள்ளே படுக்கையில் சிங்கும் ரத்தவெள்ளத்தில் மிதந்தார். சிங்கின் அருகில் அகர்வால் அமர்ந்திருந்தது தெரியவந்தது.

மேலும் தம்பதியின் மகன் கண்முன்னால் சிங் அவர்களை கத்தியால் குத்தி கொன்றதும் உறுதியானது.

இருவரையும் கொன்ற பின்னர் வெளியே தப்பி ஓட முயன்ற அகர்வால் வாசல் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அங்கேயே உட்கார்ந்திருந்துள்ளார்.

பொலிசார் தொடர்ந்து அகர்வாலிடம் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்