பட்டப்பகலில் பொதுமக்களை நடுங்க வைத்த இளைஞரின் வெறிச்செயல்: ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர்

Report Print Arbin Arbin in தெற்காசியா

தமிழகத்தின் மதுரை மேலூர் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலூர் பேருந்து நிலையத்தில் அலங்கம்பட்டியை சேர்ந்த தங்கையா என்பவர் பேருந்தில் ஏறுவதற்காக நின்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நல்லமணி என்ற நபர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கையாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த தங்கையா, சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். தொடர்ந்து குடிபோதையிலிருந்த அந்நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள், அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் தங்கையாவின் மருமகன் நல்லமணி எனவும், குடும்பத் தகராறில் கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.

நல்லமணி, தனம் தம்பதிக்கு இருகுழந்தைகள் உள்ளநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் அவர்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை தொடர்ந்துள்ளனர்.

இதற்கு காரணம் மாமனார் தங்கையா தான் எனக்கருதி, இப்படுகொலையை நல்லமணி மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்