பொதுமக்கள் முன்னிலையில் நடந்த மத வழிபாடு: கழுத்தறுபட்டு சரிந்த நபரால் அதிர்ச்சி

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் முஹர்ரம் பண்டிகையின்போது நடத்தப்பட்ட வழிபாடு ஒன்றில் 60 வயது நபர் ஒருவர் தமது கத்தியால் கழுத்தறுபட்டு சரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் முஹர்ரம் பண்டிகையின் போது இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

முகமது சாயும் என்ற அந்த 60 வயது நபர் குறித்த பணிடிகையின் ஒருபகுதியாக நடத்தப்பட்ட மத வழிபாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில், அவரிடம் இருந்த கூரான வாள் தவறுதலாக அவரது கழுத்தை துண்டித்துள்ளது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு அங்குள்ள மக்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் அதிகபடியான ரத்தம் வெளியேறியிருந்ததால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் வழக்கப்படி முஹர்ரம் மாதமானது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

இமாம் உசைன் அலியின் நினைவாக இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் ரத்தம் சிந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers